×

தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வு வெளி மாநிலங்களில் மையம் அமைப்பதா? ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ம் கட்டத் தேர்வு மார்ச் 19ல் நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6000 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் அதிகமான நபர்களுக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது நியாயமற்ற முறையில் தமிழக தேர்வர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி பணியில் சேர விடாமல் தடுக்கும் உத்தி என்றே கருத வேண்டி இருக்கிறது. எனவே தாமதம் இன்றி தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க உரிய நடவடிக்கையை தென்னக ரயில்வே துறை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வு வெளி மாநிலங்களில் மையம் அமைப்பதா? ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Southern Railways ,Jawahirulla ,Chennai ,Humanist People's Party ,M. H. ,Southern Railway ,Telangana ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்