×

தளக்கற்கள் பாதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: இருக்கன்குடி பக்தர்கள் கோரிக்கை

 

சாத்தூர், மார்ச் 15: இருக்கன்குடி கோயில் பகுதியில் தளக்கற்கள் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அதிகளவில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள பகுதி முழுவதும் மண் தரையாக இருந்ததால் மழை காலத்தில் சகதியானது.

இதனால் மழை காலங்களில் கோயிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்கள் மற்றும் வேண்டுதலை நிறைவேற்ற தீசட்டி எடுத்து கோயிலை சுற்றி வரும் பக்தர்கள் பெரும் அவதியடைந்து வந்தனர். அதனால் பக்தர்கள் வசதிக்காக கோயிலின் சுற்றுப்பகுதி முழுவதும் தளக்கற்கள் பதிக்கும் பணிகள் துவங்கியது. இப்பணிகள் கடந்த ஆறு மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் தளக்கற்கள் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post தளக்கற்கள் பாதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: இருக்கன்குடி பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Irukankudi ,Sattur ,Mariamman ,Nellai ,Tenkasi ,Thoothukudi… ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...