×

திருப்பூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

 

திருப்பூர், மார்ச் 15: நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் சார்ந்த நகரான திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர் செல்லாத வட மாநில தொழிலாளர்கள் திருப்பூரிலேயே ஹோலிப்பண்டிகையை கொண்டாடினர்.

திருப்பூர் மாநகரில் உள்ள ராயபுரம், காதர்பேட்டை, காமாட்சி அம்மன் கோயில் வீதி, ஸ்டேட் பேங்க் காலனி, லட்சுமி நகர், சித்தப்பா அவென்யூ, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து சாலையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து தெளித்து ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

The post திருப்பூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Holi festival ,Tirupur ,Holi ,Maharashtra ,Rajasthan ,Bihar ,Odisha ,Uttar Pradesh ,Gujarat ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்