×

செட்டிகுளம் அரசு பள்ளியில் ரூ.1.17 கோடியில் 5 புதிய பள்ளி கட்டிடம்

 

பாடாலூர், மார்ச் 12: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.17 கோடியில் புதிய 5 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணி துறையின் கீழ் ரூ.117.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய 5 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post செட்டிகுளம் அரசு பள்ளியில் ரூ.1.17 கோடியில் 5 புதிய பள்ளி கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Chettikulam Government School ,Patalur ,Bhoomi Pooja ,Chettikulam Government Higher Secondary School ,Alathur Taluk ,Public Works Department ,Alathur Taluk, ,Perambalur District… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை