
- சுருகாருக
- மும்பை
- Shahrukhan
- சிவானி
- கர்தா
- கொல்கத்தா
- ஷா ரக்கான்
- ஷாருக்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
மும்பை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகையின் மருத்துவ செலவுகளை ஏற்பதாக ஷாருக்கான் உறுதி அளித்துள்ளார்.கொல்கத்தாவில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான ஷிவானி. ஷாருக்கானின் தீவிர ரசிகையான இவர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ஷாருக்கானை நேரில் சந்திக்க வேண்டும் என்பது ஷிவானியின் ஆசை. இதைப்பற்றி அறிந்த ஷாருக்கான், வீடியோ கால் செய்து ஷிவானிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. வீடியோ காலில் 40 நிமிடங்கள் வரை பேசியுள்ள ஷாருக்கான், அவரது மருத்துவத்துக்கு தேவையான செலவை ஏற்றுக்கொள்வதாகவும் ஷிவானியிடம் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷிவானியின் மகள் பிரியா கூறும்போது, ‘என் தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். மேலும், அவர் என்னுடைய திருமணத்திற்கு வருவதாகவும், கொல்கத்தாவில் உள்ள வீட்டிற்கும் நேரில் வருவதாகவும் கூறினார். அப்போது, தனக்கு முள் இல்லாத மீன் குழம்பை சமைத்து தர வேண்டும் என்று அன்போடு சொன்னார்’ என்கிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஷாருக்கான் தன் ரசிகை ஒருவருக்காக 40 நிமிடங்கள் வரை செலவழித்து பேசியது மற்றும் மருத்துவ செலவை ஏற்பதாக உறுதியளித்திருப்பது குறித்த செய்தி அறிந்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
The post புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகையின் மருத்துவ செலவை ஏற்றார் ஷாருக்கான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.