×

தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டம் ரூ.49 கோடியில் திட்ட பணிகள்: 67 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.கே.நகர், பெரம்பூர், ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள 15 மாமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மண்டலகுழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். மண்டல அதிகாரி சரவணன் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், ஆகிய கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இதையடுத்து, வார்டுகளில் நடைபெறும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மண்டல குழு தலைவர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ரூ.49 கோடி மதிப்பீட்டில் 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் முக்கிய தீர்மானமாக பகிங்காம் கால்வாயை தூர்வாருதல், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல், பூங்காக்கள் பராமரிப்பு, விளையாட்டு திடல் மேம்படுத்துதல், பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது, கோடைக்காலம் தொடங்கினால் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க குடிநீர் குழாய் மாற்றி அமைத்தல், கழிவுநீர் அடைப்பை சரி செய்தல், மின்விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி பகுதி பொறியாளர்கள் திருநாவுக்கரசு, ஹரி நாத், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் நமச்சிவாயம், சுகாதாரத்துறை அதிகாரி மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டம் ரூ.49 கோடியில் திட்ட பணிகள்: 67 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet Zonal Committee ,Thandaiyarpet ,RK ,Nagar ,Perambur ,Chennai Corporation ,Zonal Office ,Zonal Committee ,Netaji Ganesan ,Zonal Officer ,Saravanan… ,Dinakaran ,
× RELATED சென்னை காவல் துறையில் 21...