சென்னை: தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வணிகம் பெருகி வருவதால் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் மின் தேவை சராசரியாக 15,000 முதல் 16,000 மெகா வாட்டாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு 526 மெகாவாட் மின்சாரம் வரும் 15 ஆண்டுகளுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்திடமிருந்து 330 மெகாவாட் மற்றும் கர்நாடாகவிலுள்ள கைகா அனல் மின் நிலையத்திடமிருந்து 196 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மீண்டும் நேற்று புதுப்பிக்கப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு 526 மெகாவாட் மின்சாரம் வரும் 15 ஆண்டுகளுக்கு தடையின்றி கிடைக்கும். இந்த ஒப்பந்தம் தமிழ்நாடு மின் வாரிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழ்நாடு கல்பாக்கம் அனல் மின்நிலைய இயக்குநர் வினோத்குமார் கர்நாடக மாநிலம், கைகா அனல் மின்நிலைய இயக்குநர் சேஷய்யா முப்பராஜி மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குநர் மாஸ்கர்னஸ் இடையே இந்த ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது.
The post கல்பாக்கம், கைகா அனல்மின் நிலையங்களுடன் ஒப்பந்தம் புதுப்பிப்பு 526 மெகாவாட் மின்சாரம் 15 ஆண்டுக்கு கிடைக்கும் appeared first on Dinakaran.
