×

ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த ஆண்டு போலவே நடத்திடுக :உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து சமூகத்தினரை ஒன்றிணைத்து குழு அமைத்து போட்டி நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு போலவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜனவரி 14ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து சமூக பிரதிநிதிகள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு அமைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

The post ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த ஆண்டு போலவே நடத்திடுக :உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Madurai ,High Court Branch ,Avanyapuram Jallikatu ,High Court ,Dinakaran ,
× RELATED அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்...