×

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80வது இடத்திற்கும் முன்னேற்றம்: டெல்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு தகவல்

டெல்லி: உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. டெல்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டு பட்டியலில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் நாடுகளில் மேற்கொள்ளும் விசா மற்றும் விசா அல்லாத பயணங்கள் அடிப்படையில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

ஜப்பான் 2வது இடத்திலும் 3வது இடத்தில பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. 2024ஆம் ஆண்டு 85 வது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் தற்போது 80வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும். அதே போல் பாகிஸ்தான் பாஸ்போர்ட் 103வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை கொண்டு 34 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

 

The post உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80வது இடத்திற்கும் முன்னேற்றம்: டெல்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : INDIA ,DELHI PASSPORT ,Delhi ,Singapore ,
× RELATED வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அழைத்து...