×

விடியற் காலை கோலமும் மருத்துவ நன்மைகளும்!

நன்றி குங்குமம் தோழி

*விடியற் காலையில் எழுந்து வாசலை சுத்தம் செய்து கோலம் போடுவதால் நல்ல குளிர்ந்தக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது.

*குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலுக்கு நல்லப் பயிற்சிக் கிடைக்கிறது. உடல் பருமனைத் தவிர்க்கிறது. முதுகுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஆகிய வலிகளும் இப்படிக் கோலம் போடும் பெண்களுக்கு வருவதில்லை.

*கட்டை விரலாலும், ஆள் காட்டி விரலாலும்தானே கோல மாவை எடுத்துக் கோலம் போடுகிறோம். அந்தப் பிரஷர் காரணமாக நரம்புகள் உறுதி பெறுவதுடன் நரம்புத் தளர்ச்சிப் போன்ற வியாதிகளும் வராது.

*கோலம் போடும் போது மிகவும் ஆழ்ந்து மூச்சு விடுவதால் மிகவும் அதிகமான ஆக்சிஜன் கிடைக்கிறது. இது பெண்களுக்கு ‘பிராணாயாமம்’ போல ஆகும்.

*உள்ளங்கால்களை நன்றாக அழுத்தமாக ஊன்றிக் கொண்டு நின்று கோலம் போடுவதால் ‘குதிகால் வலிகள்’ வராது.

*புள்ளிகளை எண்ணிப் பார்த்துக் கோலம் போடும் நேரம் மூளைக்கும் நல்ல வேலை கிடைக்கிறது. கணக்கிலும் நல்ல பயிற்சிக் கிடைக்கிறது.

தொகுப்பு: பி.தீபா, கிருஷ்ணகிரி.

 

The post விடியற் காலை கோலமும் மருத்துவ நன்மைகளும்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED விளையாட்டுத் துறையும் இயன்முறை மருத்துவமும்!