×

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த மல்லிகா குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த மல்லிகா (வயது 55) க/பெ. கிருஷ்ணன் நேற்று (08.01.2025) ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தத் துயரமான செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த மல்லிகாவின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

The post திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த மல்லிகா குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Mallika ,Salem ,Tirupati ,Chennai ,Dasanur, ,Mecheri village ,Mettur taluk ,Salem district ,K/P. Krishnan ,Tirumala Tirupati temple ,Andhra Pradesh ,Lord ,Swami ,
× RELATED ஒன்றிய அரசு கல்வித்துறையில் எதை செய்ய...