மதுரை : தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அரசு ஒருபோதும் அனுமதி தராது என்று மதுரையில் டங்ஸ்டன் எதிர்ப்புக்குழுவினரிடம் பதிவுத்துறை அமைச்சர் மூரத்தி உறுதி அளித்தார். மதுரையில் அமைச்சர் மூர்த்தியை சந்தித்து அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி கிராமத்தினர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முறையிட்டனர். தடையை மீறி பேரணியாகச்சென்ற கிராமத்தினர் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பபெற கோரிக்கை விடுத்தனர். இதற்கு பேசிய அமைச்சர் மூர்த்தி, “தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது; ஒரு காலத்திலும் அனுமதி தரமாட்டோம். டங்ஸ்டன் திட்டம் தமிழகத்திற்கு வந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என முதல்வர் கூறியுள்ளளார்.
டங்ஸ்டன் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டுவந்தால், முன்னால் நின்று திமுக போராடும். ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டு ஆய்வு எனச் சொன்னாலும் ஒரு துளி பகுதி கூட கொடுக்க முடியாது. தமிழக அரசு எப்போதும் மக்கள் பக்கம் தான் இருக்கும். அதில் மாற்றமில்லை. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மக்களோடு நாங்களும் போராட்டத்தில் நிற்போம். டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து பேரணியில் ஈடுபட்ட மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அரசு ஒருபோதும் அனுமதி தராது : அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம் appeared first on Dinakaran.