×

எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராசிபுரம், ஜன.9: வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்தில், 1,2,3 வகுப்புகளுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது. பயிற்சியை வெண்ணந்தூர் வட்டார கல்வி அலுவலர் வளர்மதி தொடங்கி வைத்தனர். நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சிவபெருமான் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார். 4 மற்றும் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பச்சமுத்து பயிற்சியை தொடங்கி வைத்தார். தற்போது பள்ளியில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி கற்பித்தலை சிறப்பாக வழங்க அறிவுரை கூறினார். பயிற்சியில் 114 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

The post எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Vennandur Government Boys Higher Secondary School ,Vennandur District ,Education Officer ,Valarmathi ,Namakkal District ,Education and ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா...