×

காங்.,கமிட்டி கூட்டம்

ராசிபுரம், ஜன.8:வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்படியான டங்க்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயிலில் பயண கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பட்டா வழங்க உத்தரவிட்டும் வெண்ணந்தூர் பகுதியில் சிலருக்கு பட்டா வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post காங்.,கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress Committee Meeting ,Rasipuram ,Vennandur City Congress Committee ,City Congress ,President ,Singaram ,MLA EVKS ,Ilangovan ,Manmohan Singh ,Madurai district… ,Congress ,Committee Meeting ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா...