×

உடைமைகள் வராததால் விமானநிலையத்தில் பயணிகள் தவிப்பு

சென்னை: குவைத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் உடைமைகள் வராததால் 248 பயணிகள் தவித்து வருகின்றனர். 332 பேரில் 12 பேரின் உடைமைகள் மட்டுமே வந்தன; எஞ்சியவர்களின் உடைமைகள் வராததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர், மோசமான வானிலையால் விமானத்தின் எடையை குறைக்க உடைமைகள் குவைத் விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாளில் உடைமைகள் பயணிகளின் வீடுகளுக்கு சென்று கொடுக்கப்படும் என விமான நிறுவன அதிகாரிகள் சமாதானம் செய்தனர். தங்களில் சிலருக்கு மாற்று உடைகள்கூட இல்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்து தங்கள் வீடுகளுக்கு உடைமைகள் இல்லாமல் பயணிகள் வெறுங்கையுடன் புறப்பட்டு சென்றனர்.

The post உடைமைகள் வராததால் விமானநிலையத்தில் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Air India Express ,Kuwait ,
× RELATED வட மாநிலங்களில் நிலவும் கடுமையான...