×

தமிழக ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழ்த் தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும், ஒன்றிய அரசின் ஏஜென்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசை மாற்று வித்தைகளை செய்யும் அதிமுக, பாஜ கள்ளக் கூட்டணியை கண்டித்தும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமை வகித்தார். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் விசுவநாதன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் மீ.அ.வைதியலிங்கம், தமிழ்மணி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, டி.காமராஜ், ஆலந்தூர் சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், கன்டோன்மென்ட் நகர செயலாளர் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரஞ்சன், பகுதி செயலாளர்கள் திருநீர்மலை த.ஜெயக்குமார், செம்பாக்கம் ரா.சுரேஷ், மாடம்பாக்கம் ஆ.நடராஜன், ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோ.ஜானகிராமன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், விளையாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சுகுணா, திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இ.மணி, மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக ஆளுநரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

 

The post தமிழக ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Nadu ,Chennai ,AIADMK ,BJP ,Tamil Nadu ,Union government ,Governor ,R.N. Ravi ,Tamil ,Motherland ,
× RELATED ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின்...