×

ஏரிக்கரையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: மர்ம நபருக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி (60). இவர் சென்னாங்காரணி கிராமத்தில் வசித்து வரும் தனது மகள் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் சென்றுள்ளார். மாலையில் இயற்கை உபாதைக்காக சென்னாங்கரணி ஏரிக்கரைக்கு பூங்கொடி சென்றார். அங்கு அடையாளம் தெரியாத ஒருவர் பூங்கொடியை புதருக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த பூங்கொடி கத்தி கூச்சலிட்டுள்ளார். அதனைக் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த போலீசார், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பூங்கொடியை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் பூங்கொடியிடம் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் ஆறு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதால் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஏரிக்கரையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: மர்ம நபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Poongodi ,Palavakkam ,Uthukkottai ,Chennankarani ,Poongodi… ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு...