அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய கடைகள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரம் பேர் இங்கு தங்கி, வேலை செய்து வருகின்றனர். மார்க்கெட்டில், சமீபகாலமாக வழிப்பறி, ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைகளில் பட்டாக்கத்தியுடன் வலம் வந்தனர்.
பின்னர் அங்குள்ள கடையில் புகுந்து செல்போன் மற்றும் கல்லாவில் இருந்து பணத்ைத திருடி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் வழிப்பறி கும்பல் பட்டாக்கத்தியுடன் சுற்றிவருவதால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தியுடன் திரிந்த ரவுடிகள்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.