×

தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி தற்போது ஆளுநர் கிடையாது, கேஷுவல் லேபர்: ஆர்.எஸ்.பாரதி தாக்கு

பொன்னேரி: தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி தற்போது ஆளுநர் கிடையாது, கேஷுவல் லேபர் மட்டுமே என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடினார். பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆளுநர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதவிக்காலம் முடிவடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் தற்போது கேஷுவல் லேபர் மட்டுமே. நிரந்தர ஆளுநர் கிடையாது. நிரந்தர ஆளுநராக இல்லாதபோது நாம் ஏன் ஆளுநர் உரையை வாசிக்க வேண்டும் என மனம் ஏற்க மறுத்து அவரே வெளிநடப்பு செய்து விட்டார் என்றார்.

‘பெரியாரை விடவா மற்றவர்கள் தமிழ்த்தாயை அவமதித்துவிட்டார்கள்’ என அர்ஜூன் சம்பத் கூறியது பற்றிய கேள்விக்கு, அர்த்தமுள்ளவர்கள் பேசினால் பதில் கூறலாம், தான்தோன்றித்தனமாக பேசுபவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. பெரியாரை பழித்தவன் இந்த நாட்டில் இருக்க முடியாது என்றார். பின்னர், பல்கலைக்கழக மானியக்குழு சட்ட திருத்தம் தொடர்பான கேள்விக்கு, துணைவேந்தரை நியமிக்காததால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன. இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளுநர்தான் என இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். தற்போது ஸ்டாலின் வலியுறுத்துவதைப்போல, ஜெயலலிதாவும் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமனம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் பலர் பேசுவதாக ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

The post தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி தற்போது ஆளுநர் கிடையாது, கேஷுவல் லேபர்: ஆர்.எஸ்.பாரதி தாக்கு appeared first on Dinakaran.

Tags : R.N. Ravi ,Governor of ,Tamil Nadu ,R.S. Bharathi ,Ponneri ,DMK Organization ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள...