- தாமரைபாக்கம்
- அமைச்சர்
- நாசர்
- பெரியபாளையம்
- ஆவடி எஸ்.எம்.நாசர்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திருவள்ளூர் மத்திய மாவட்டம்
- எல்லபுரம் மத்திய ஒன்றிய திமுக...
- அமைச்சர் நாசர்
பெரியபாளையம்: தாமரைப்பாக்கம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில், தாமரைப்பாக்கம் அடுத்த கொமக்கம்பேடு ஊராட்சி பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமை தாங்கினார். அமைப்பாளர்கள் ஆளவந்தான், தங்கராஜ், தரணி ரவி ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முனுசாமி, குமார், சுப்பிரமணி, நாகலிங்கம், உமா சீனிவாசன், லோகநாதன், பாஸ்கர், பாஸ்கர், அன்பு, ஸ்ரீதர், நாராயணசாமி, சீனிவாசன், சுப்பிரமணி, வெங்கடேஸ்வரி, ருக்மாங்கதன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, தாயகம் கவி, தொகுதி பொறுப்பாளர் பிடிசி செல்வராஜ், தலைமை பேச்சாளர் சாய் ரித்திக் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் காயத்ரி ஸ்ரீதரன், எத்திராஜ், கமலேஷ், தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, காஞ்சனா முனுசாமி, சேகர், ரஜினி, அச்சுதன், கண்ணன், சரத்குமார், ரஞ்சித், டேவிட், ரகு, இளம் தென்றல், சூரியமுத்து, வாலீஸ்வரன், தமிழ் மூர்த்தி, பிரகாஷ், கோபிநாத், சார்லஸ், ரகு, விஜயகுமார், வேலன், செம்பேடு செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், இளைஞரணி அமைப்பாளர் சரத்குமார் நன்றி கூறினார்.
பூந்தமல்லி : திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. திருவள்ளூர் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜே.பவுல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விலையில்லா மிதிவண்டி, புடவை, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. திருவேற்காடு நகர 7வது வட்டச் செயலாளர் விநாயகம் அனைவரையும் வரவேற்றார்.
இதில் 7வது வார்டு நிர்வாகிகள் பரந்தாமன், ருக்மணி பவுல், செந்தில்குமார், உமா முருகன், வெங்கடேசன், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் தலைமை சிறப்பு பேச்சாளர்கள் திருவொற்றியூர் கருணாநிதி, ராசாராபத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தநிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் நகரச் செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஜெரால்டு, நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கர், 7வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தாமரைப்பாக்கம் அருகே 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.