×

நீலகிரி மாவட்ட மக்கள், சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிவது நல்லது: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: HMPV தொற்று மட்டுமின்றி வழக்கமான காய்ச்சல் காலங்களிலும் நீலகிரி மாவட்ட மக்கள், சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிவது நல்லது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு அருகே கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு HMPV தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு தொற்று உறிதியாகியுள்ள நிலையில், கர்நாடகா, கேரளா எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நீலகிரி மாவட்ட சோதனை சாவடிகளில் கண்காணிக்க தனியாக குழு அமைப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு, தற்போது எந்த கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.

The post நீலகிரி மாவட்ட மக்கள், சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிவது நல்லது: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Nilagiri district ,Nilgiri ,Nilgiri District ,Governor ,Lakshmi Bhavya Thandiru ,Neelgiri district ,Karnataka ,District ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில்...