சென்னை: திராவிட மாடல் ஆட்சிதான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று வெளிப்படையாக பேசினார் ஈவிகேஎஸ் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். படத் திறப்பு விழாவில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல; எனக்கும் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு பெரிய இழப்புதான்.
நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் நிதியமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பெற்றவர் மன்மோகன். மன்மோகன் சிங் ஆட்சியில்தான் நாட்டில் பல்வேறு முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்மோகன் சிங் ஆட்சியில் முக்கியமான துறைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை கொண்டுவந்தவர்.
மன்மோகன் சிங் ஆட்சியில் தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு. இரு தலைவர்களை நாம் அடுத்தடுத்து இழந்திருக்கிறோம். ஆதரித்தாலும் சரி எதிர்த்தாலும் சரி உறுதியுடன் இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். திராவிட மாடல் ஆட்சிதான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று வெளிப்படையாக பேசினார் ஈவிகேஎஸ் என்று கூறினார்.
The post திராவிட மாடல் ஆட்சிதான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று வெளிப்படையாக பேசினார் ஈவிகேஎஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.