ஈரான்: இனி ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டேம்; தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் தொடங்கிய போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் அங்கு மரணங்கள் அதிகரித்து வருகிறது. இரு தரப்புக்குமான போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் சுரங்கப்பாதைகள் முக்கிய தலைவர்கள், ராணுவ தளவாடங்கள் என அனைத்தையும் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவு நாடான ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது மட்டுமின்றி இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கியது ஈரான். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியது. இருதரப்புக்குமான போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஹிஸ்புல்லாவை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராக உள்ளோம். இனி இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மிக மோசமாகும். எங்களுடைய இந்த தாக்குதல் உலக அளவில் பெரிய போருக்கு அழைத்து செல்லும். இனி ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டேம்; தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
The post எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டேம்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை கொடுத்த ஈரான் appeared first on Dinakaran.