×

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு மறைமுக ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு மறைமுக ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன்-3 படத்தை ஷங்கர் முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது எனவும் இந்தியன்-3 படத்தை முடிக்க ஷங்கர் மேலும் ரூ.65 கோடி கேட்பதாக திரைத்துறை கூட்டமைப்பிடம் லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது. எஞ்சிய காட்சிகள், பாடல்களை படமாக்காமல் இந்தியன் – 3 படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் தேதி வெளியாகும் கேம் சேஞ்சர் படத்திற்கான திரையரங்கு ஒப்பந்தம் தமிழகத்தில் இன்னும் தொடங்கவில்லை.

The post ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு மறைமுக ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Shankar ,Ram Charan ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கடுமையான விமர்சனங்களை ஏத்துக்கணும்: ஷங்கர்