- மோர்ட்வார்ட்'
- குலதேவ கோயில்
- புதிய ஆண்டு
- மூர்ட்வொர்த்
- தோடர்
- புத்தாண்டு விழா
- நீலகிரி
- திருவிழா
- குலதீவன் கோயில்
உதகை: புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டி உதகை அருகே தோடர் இன பழங்குடியின ஆண்கள் கொண்டாடிய மொற்ட்வர்த்’ என்ற விநோத திருவிழா மே சிலிர்க்க வைத்துள்ளது. பாரம்பரியமும், கலாச்சாரமும் மாறாமல் வாழ்ந்துவரும் தோடர் இன மக்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வருகின்றனர். டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மொற்ட்வர்த் என்ற வினோத திருவிழாவை இவர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மொற்ட்வர்த் விழா விமரிசையாக நடைபெற்றது.
தோடர் இன மக்களின் தலைமை இடமாக திகழும் உதகை அருகே உள்ள முத்தநாடு கிராமத்தில் நடந்த திருவிழாவில் 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 100கணக்கான ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டி குலதெய்வ மூன்மூ என்று அழைக்கப்படும் கூம்பு வடிவிலான தேக்கிஸ் அம்மன் கோவிலில் தோடர் இன ஆண்கள் பிராத்தனை செய்தும் மண்டியிட்டும் வணங்கினர்.
பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள அடையாள்வோ என்று அழைக்கப்படும் பிறை வடிவிலான கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர்கள் அங்கு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடியும் மகிழ்ந்தனர். கடைசியாக வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் தோடர் இன இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அனைவரையும் ஆச்சர்யபடுத்தினர். தொழில்நுட்பம் வேகமாக வளரும் இக்காலத்தில் அதனோடு ஒன்றாமல் இன்றளவும் பாரம்பரியத்தை பின்பற்றும் நோக்கில் தோடர் இன மக்களின் வினோத வழிபாடு மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
The post தோடர் இன பழங்குடியினர் கொண்டாடிய ‘மொற்ட்வர்த்’ விநோத திருவிழா: புத்தாண்டு சிறப்பாக அமைய குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.