×

வாரவிடுமுறை நாளில் களைகட்டிய சென்னை மலர் கண்காட்சி : குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குவிந்து உற்சாகம்

செம்மொழிப் பூங்கா: வார இறுதியில் சென்னை மலர் கண்காட்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு 800 வகையான சுமார் 30 லட்சம் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. செம்மொழிப் பூங்கா முழுவதும் பல வண்ண பூச்செடிகள் வெளிநாட்டு மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் காட்சிபடுத்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கின்றன.

50க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம்பூச்சி, பறவைகள் உள்ளிட்ட வடிவங்களில் மலர்களின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இது போன்ற மலர் கண்காட்சி பார்ப்பது பரவசத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். வார விடுமுறை நாளையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் திரண்டு மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். பசுமை சூழலில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் பூக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

The post வாரவிடுமுறை நாளில் களைகட்டிய சென்னை மலர் கண்காட்சி : குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குவிந்து உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Chennai Flower Show ,CHEMMESHIB PARK ,CHENNAI ,4th Flower Exhibition ,Chemmozhi Park ,Chennai Flower Show: ,to ,
× RELATED சென்னை மலர் கண்காட்சிக்காக தயார் செய்த தொட்டிகளில் மலர்கள் பூத்துள்ளன