- திருப்பூரு முருகன் கோயில்
- அமைச்சர்
- சேகர்பபு
- பெரம்பூர்
- கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனை
- திருப்போரூர் முருகன் கோவில்
- சேகர்பாபு
- சென்னை
- கொளத்தூர்
- திருப்பூர் முருகன் கோயில் உண்டியால்
பெரம்பூர்: பிப்ரவரி மாத இறுதியில் கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனை முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும். திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தர் செல்போன் உண்டியலில் விழுந்தது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும், என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேயர் பிரியா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் ஜி.கே.எம். காலனியில் உள்ள சுப்பிரமணியன் தெருவில் வீதி வீதியாக நடைபயணம் சென்று பொதுமக்களின் குறைகளை, கோரிக்கைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் கேட்டறிந்தனர். இறுதியாக திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிதாக 500 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிட பணிகள் நடந்து வருகிறது. எம்ஆர்ஐ, சி.டி ஸ்கேன் உள்ளிட்டவற்றை கொண்ட சிறப்பு வாய்ந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தமாக 750 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையாக இந்த தொகுதியில் சிறந்த மருத்துவமனையாக பெரியார் நகர் அரசு மருத்துவமனை திகழும்.
டி.எம்.எஸ் கீழே இந்த மருத்துவமனை உள்ளது. புதிதாக மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் இந்த தொகுதியில் செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 1 முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாத இறுதியில் இந்த மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்படும்.
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த பக்தரின் செல்போனை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சி கிள்ளி கொடுக்காத ஆட்சி, இந்த ஆட்சி அள்ளிக் கொடுக்கக்கூடிய ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின் போது பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐ-போனை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.