×

பல்லாவரம் தொகுதியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தாம்பரம்: பல்லாவரம் தொகுதியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா பணியை இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், 6வது வார்டு, எம்ஜிஆர் நகரில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும திறந்தவெளி கட்டண நிதியின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் பசுமைவெளி அறிவியில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த பசுமைவெளி அறிவியில் பூங்காவில் நடைபாதை, மின்விளக்கு, மதில்சுவர் அமைத்து வண்ண படங்கள் வரைதல், நியூட்டன்ஸ் கலர், ஸ்ட்ரைட் பார் பாசிங் பாராபோலா, வார்டெக்ஸ், பர்ஸ்ட் ஆர்டர் லிவர், நியூட்டன்ஸ் தேர்ட் லா, சன் டயல், ப்லோடிங் பேர்ட், செகண்ட் ஆர்டர் லிவர், பர்சிஸ்டன்ஸ் ஆப் விஷன், மியூசிக்கல் டியூப்ஸ், சிம்பிள் கேமரா, பீரியாடிக் டேபிள், டபுள் எண்டட் கோன், சைலோபோன், யுமிடிட்டி மீட்டர், டபுள் ஸ்விங், சீசா, ஸ்லைடு, உங்கிள் ஜிம், மேரி கோ ரவுண்ட் 4 சீட்டர், சிங்கிள் சிஸ்டர், ரோ, ஏர் வாக்கர், செஸ்ட் பிரஸ், லெக் பிரஸ் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலம் குழு தலைவர் வே.கருணாநிதி, பகுதி செயலாளர் திருநீர்மலை த.ஜெயகுமார், உதவி செயற்பொறியாளர் சத்தியசீலன், மாமன்ற உறுப்பினர்கள் கல்யாணி டில்லி, ரம்யா சத்யாபிரபு, சத்யா மதியழகன் உட்பட பலர் இருந்தனர்.

The post பல்லாவரம் தொகுதியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,MLA ,Tambaram ,E. Karunanidhi ,Pallavaram Assembly Constituency ,Tambaram Corporation ,1st Zone ,6th Ward ,MGR Nagar ,Chennai Metropolitan Development Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தெரு...