×

கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி காவல்துறை சார்பில் நள்ளிரவில் கேக் வெட்டி பொதுமக்களுடன் கொண்டாடினர்..

கிருஷ்ணகிரி: உலகம் முழுவதும் 2025 புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடல் பாடல், பிரார்த்தனைகள் என மக்கள் உற்சாகமாக புத்தாண்டு வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியான ரவுண்டானா பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொதுமக்களும் காவல்துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

The post கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி காவல்துறை சார்பில் நள்ளிரவில் கேக் வெட்டி பொதுமக்களுடன் கொண்டாடினர்.. appeared first on Dinakaran.

Tags : New Year's Eve ,Krishnagiri city ,Krishnagiri ,New Year ,Krishnagiri District Police ,Roundana ,
× RELATED கடற்கரையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்