×

முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசிய நபர்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.

கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது. வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும். முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

The post முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசிய நபர்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Nehru ,Tamil Nadu Congress ,CHENNAI ,BHARAT BALAJI ,JAWAHARLAL NERU ,Dinakaran ,
× RELATED கேரள கழிவுகள் திருப்பி அனுப்பப்பட்டன: கே.என்.நேரு பேட்டி