- மஞ்சள் எச்சரிக்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- புதுச்சேரி
- எச்சரிக்கை
- இந்திய வானிலையியல்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியின் சில பகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் குளிர் நாள் முதல் கடுமையான குளிர் நாள் வரை காணப்பட்டது. ஜம்மு-காஷ்மீர்-லடாக்-கில்கிட்-பால்டிஸ்தான்-முசாபராபாத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தனிமைப்படுத்தப்பட்ட குளிர் அலை நிலைகள் காணப்படுகின்றன.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகியுள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 01-01-2025 முதல் 05-01-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
The post தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.