×

அம்பேத்கர் குறித்த கருத்து; அமித் ஷா பதவி விலகக் கோரி இடதுசாரிகள் போராட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் சட்டமாமேதை அம்பேத்கர் குறித்து சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது. இடதுசாரி கட்சிகளால் நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்ட அமித் ஷாவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ(எம்எல்) லிபரேஷன், ஆர்எஸ்பி, ஏஐஎப்பி மற்றும் சிஜிபிஐ உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராகவும், அவரை பதவியில் இருந்து நீக்கக்கோரியும் முழக்கமிட்டனர்.

The post அம்பேத்கர் குறித்த கருத்து; அமித் ஷா பதவி விலகக் கோரி இடதுசாரிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Leftists ,Amit Shah ,New Delhi ,Union Home Minister ,Parliament ,Congress ,Left ,Minister ,Dinakaran ,
× RELATED ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்