×

குஜராத் மாநிலம், பரூச்சில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்ததால், 4 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலம், பரூச்சில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்ததால், 4 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பரூச் மாவட்டம், தாஹேஜில் உள்ள ஜிஎஃப்எல் தொழிற்சாலையில் இரவு வால்வு ஒன்றில் பழுது ஏற்பட்டு விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. விஷவாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததை அடுத்து, 4 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ரசாயன வாயுவை சுவாசித்த 4 தொழிலாளர்களும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

The post குஜராத் மாநிலம், பரூச்சில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்ததால், 4 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bharuch, Gujarat ,Gujarat ,GFL ,Dahej, Bharuch district ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து