×

தென் கொரியா பயணிகள் விமானம் விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 179ஆக அதிகரிப்பு!

தென் கொரியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 179ஆக அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளானது. 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்றபோது விமானம் விபத்தில் சிக்கியது. தாய்லாந்தில் இருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

இதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லேண்டிங் கியர் சரியாக இயங்காததால் ஓடு பாதையில் இருந்து விலகி தடுப்புச் சுவர் மோதி விமானம் தீப்பிடித்தது.

 

The post தென் கொரியா பயணிகள் விமானம் விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 179ஆக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : South Korea ,Dinakaran ,
× RELATED தென்கொரியாவில் பயங்கரம்.. வெடித்து சிதறிய விமானம் : 179 பேர் பலி