×

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி, பொங்கலுக்கு விடுமுறை

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் ஓஹியோ மாகாண சபையால் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கு கவர்னர் மைக் டிவைனால் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்து மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை மற்றும் பள்ளி ஆண்டுக்கு இரண்டு இந்து விடுமுறைகள் அளிக்கப்படும். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதிய சட்டத்தின்படி ஓஹியோவில் உள்ள ஒவ்வொரு இந்து மாணவரும் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். மேலும் 2 பிற மத விடுமுறை நாட்களையும் மாணவர்கள் எடுக்க அனுமதிக்கப்படுகின்றது. தமிழ் மாணவர் பொங்கலுக்கும், குஜராத்தி மாணவர் நவராத்திரி அல்லது அன்னக்கூடுக்கு விடுமுறை எடுக்கலாம். தெலுங்கு மாணவர் உகாதி விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். பெங்காலி மாணவர் துர்கா பூஜைக்கும், விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். இஸ்கான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்திக்கு விடுமுறை எடுக்கலாம் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி, பொங்கலுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : US ,Diwali ,Pongal ,San Francisco ,Governor ,Mike DeWine ,Ohio State Assembly ,
× RELATED கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு...