சேலம்:பெங்களூரு கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி, 15 நாட்களுக்கு மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பெங்களூரு-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், குறிப்பிட்ட 10 நாட்களுக்கு இருமார்க்கத்திலும் 15 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஓசூர் யார்டு தண்டவாள பராமரிப்பு பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20641), மறுமார்க்கத்தில் இயங்கும் கோவை-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20642) ஆகியவை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post பராமரிப்பு பணி ஒத்திவைப்பு வந்தேபாரத் ரயில் வழக்கம் போல் இயங்கும் appeared first on Dinakaran.