- நாட்டு நலப்பணித் திட்டம்
- முகாம்
- குஜிலியம்பரை
- நலன்புரி
- குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி
- பள்ளி
- தலைமையாசிரியை
- கணேஷ்வதி
- ராமகிரி பெருமாள் கோயில்
- தேசிய நல திட்ட முகாம்
குஜிலியம்பாறை, டிச. 27: குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை கணேஷ்வதி தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து பேசினார். முகாமில் பள்ளி வளாகம், ராமகிரி பெருமாள் கோயில் வளாகம், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
பேரிடர் மீட்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு சொற்பொழிவு, நவீன மருத்துவத்தில் நலவாழ்வு சொற்பொழிவு, சமுதாய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். டிச.23 அன்று துவங்கி 7 நாட்கள் நடைபெறும் இம்முகாம் வருகிற டிச.29 அன்று போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியுடன் நிறைவு பெறுகிறது. இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், விநாயகம், நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகானந்தம் நன்றி கூறினார்.
The post குஜிலியம்பாறையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் appeared first on Dinakaran.