மயிலாடுதுறை: பொங்கல் கரும்பை இடைத்தரகரின்றி அரசே நேரடியாக கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, காத்திருப்பு, அள்ளிவிழாக்கம், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அண்மையில் பெய்த மழையால் கரும்புகள் அனைத்தும் விவசாய நிலத்திலேயே சாய்ந்தன.
ஏற்கனவே ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவிட்டதாக கூறும் விவசாயிகள் தற்போது மேலும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவிட்டு சாய்ந்த கரும்புகளை தூக்கி நிறுத்தி பாதுகாத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்ய இடைத்தரகரின்றி கூட்டுறவு மூலம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கரும்பு ஒன்றுக்கு 35 ரூபாய் நேரடியாக வழங்கினால் மட்டுமே வரும் களங்களில் கரும்பு விவசாயத்தை தொடர முடியும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post நெருங்கும் பொங்கல் பண்டிகை: கரும்பை இடைத்தரகரின்றி அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!! appeared first on Dinakaran.