×

என் படைப்பு திறனுக்கு முன்னேறி செல்ல இடமில்லை என்பதை உணர்ந்ததால் ஓய்வு பெற்றேன்: மனம் திறந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வை அறிவித்து, அணியில் இருந்து விலகினார். அதற்கு என்ன காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் அஸ்வின் இங்கிலாந்து ஊடகம் ஒன்றிற்கு இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நான் எப்போதும் ஒரே விஷயத்தை பிடித்துக் கொண்டு இருப்பதில்லை. என் வாழ்வில் நான் பாதுகாப்பற்றவனாக உணர்ந்ததில்லை.

இன்று எது எனது ஆக இருக்கிறதோ, நாளை அது எனதாக இருக்கும் என்பதை நான் நம்புவதில்லை. நான் எப்போதும் எனக்கான விஷயங்களை விட்டுவிட்டு செல்லவே விரும்புகிறேன். மக்கள் என்னை கொண்டாடுவதையும் நான் நம்புவதில்லை. இந்தியாவில் சில சமயம் மக்களின் கவனத்தை ஈர்க்காமல் இருப்பது நல்லது என நான் நம்புகிறேன். என்னை தாண்டி எனது விளையாட்டு தான் எப்போதுமே முன்னிலையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் எனது ஓய்வு பற்றி இதற்கு முன்பும் சில சமயம் யோசித்து இருக்கிறேன்.

ஒரு நாள் நான் எழுந்து பார்க்கும் போது எனக்குள் இருக்கும் படைப்பாற்றலுக்கு எதிர்காலமோ, அது முன்னேறி செல்வதற்கான இடம் இல்லை என்று தெரிந்தால் அன்றுதான் நான் ஓய்வு பெற வேண்டும் என நினைத்தேன். நான் திடீரென எனக்குள் இருக்கும் படைப்பு திறனுக்கு முன்னேறிச் செல்வதற்கு இடமில்லை என்பதை உணர்ந்தேன். அதனாலேயே ஓய்வு பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post என் படைப்பு திறனுக்கு முன்னேறி செல்ல இடமில்லை என்பதை உணர்ந்ததால் ஓய்வு பெற்றேன்: மனம் திறந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின் appeared first on Dinakaran.

Tags : Ravichandran Aswin ,Chennai ,
× RELATED ரவிச்சந்திரன் அஸ்வின் உணர்ச்சிகரமான தருணம்! #ThankYouAsh #ashwin