- காஞ்சீபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
- காஞ்சிபுரம்
- கலெக்டர்
- கலிச்செல்வி மோகன்
- குடிப்பழக்கம் மற்றும் தயார்நிலைத் துறை
- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், கல்லூரியை சேர்ந்த சுமார் 280 மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு, போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியப்படி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் புறப்பட்டு பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று பேரணி முடிவடைந்தது. இந்நிகழ்வில், மாவட்ட போலீஸ் எஸ்.பி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் உதவி ஆணையர் (கலால்) திருவாசகம், அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.