×

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30ஆம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 ஆகிய 220 கிலோ எடையிலான 2 சிறிய செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் நம்பக தகுந்த ராக்கெட்டுகளில் ஒன்றான பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 60வது பயணமாக சி-60 திட்டம் டிசம்பர் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் தயாராக உள்ளதாகவும், ராக்கெட்டின் முனைப்பகுதியில் 2 செயற்கைகோள்கள் நிறுவப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 220 எடை கொண்ட எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 என்ற 2 செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூலமாக பூமியிலிருந்து 460 கிமீ உயரத்திற்கு அனுப்பி வெவ்வேறு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதாகவும், 2035ம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை போன்று இந்தியாவும் விண்ணில் நிறுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இந்த பரிசோதனை அமையும் என கூறப்படுகிறது.

தனித்தனியாக விண்கலங்களை ஏவி அவற்றை ஒன்றாக இணைய செய்வதற்கான பணியை டாக்கிங் என கூறப்படும். அதனை சாதிக்கும் பட்சத்தில் உலகளவில் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்பை இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த திட்டத்தை வெற்றி பெற வைப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30ஆம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் appeared first on Dinakaran.

Tags : Sriharikota, Andhra ,Sriharikota ,Israel ,
× RELATED பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி விஞ்ஞானிகளுக்கு வாசன் பாராட்டு