மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து கோப்பைக்காக மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சென்னையின் எப்சி – மும்பை சிட்டி அணிகள் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் ஆட்டத்தை எதிர்கொண்டன. இருப்பினும், ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் மும்பையின் நிகோலாஸ் கேரலிஸ் சிறப்பாக ஆடி முதல் கோல் அடித்து தம் அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். அதன் பின் இரு அணிகளும் கோல் முடிக்க முடியாமல் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 1-0 கோல் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து, புள்ளிப் பட்டியலில் மும்பை அணி, 12 போட்டிகளில் 5 வெற்றியுடன் 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. சென்னை அணி 13 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 டிரா, 6 தோல்விகளுடன் 9ம் இடத்தில் பின் தங்கி உள்ளது. மோகன் பகான் முதலிடத்திலும், பெங்களூரு 2ம் இடத்திலும் நீடிக்கின்றன. சென்னையின் எப்சி அடுத்ததாக வரும் 28ம் தேதி பலம் வாய்ந்த பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.
The post ஐஎஸ்எல் கால்பந்து கோப்பை என்று தணியுமிந்த சோகம்? மும்பையிடம் தோற்ற சென்னை appeared first on Dinakaran.