×

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி பெகாசஸ் விவகாரத்தை இனி உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவுமென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 1000 பேரின் செல்போன் வேவு பார்க்கப்பட்டதாக கடந்த 2021ல் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இதற்கிடையே, பெகாசஸ் மென்பொருளுக்கான இணைப்பை ரகசியமாக வாட்ஸ் அப் மூலம் அனுப்பி 300 இந்தியர்கள் உட்பட 1400 பேர் வேவுபார்க்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பெகாசஸ் நிறுவனம் சட்டவிரோதமாக உளவு மென்பொருளை அனுப்பியதை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘சட்டவிரோத ஸ்பைவேர் மோசடியில் இந்தியர்களின் 300 வாட்ஸ்அப் எண்கள் எவ்வாறு இலக்காக்கப்பட்டன என்பதை அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது. இனி, உளவுபார்க்கப்பட்ட 300 இந்தியர்கள் யார் என்பது குறித்து மோடி அரசு பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வேவு பார்க்கப்பட்ட 2 ஒன்றிய அமைச்சர்கள் யார்? 3 எதிர்க்கட்சி தலைவர்கள் யார்? பத்திரிகையாளர்கள் யார், யார்? எந்த தொழிலதிபர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்பதை தெரியப்படுத்துங்கள். மேலும், அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துமாஉ உரிய வழக்குகள் பதிவு செய்யப்படுமா?என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The post அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி பெகாசஸ் விவகாரத்தை இனி உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா? காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Pegasus ,US court ,Congress ,New Delhi ,India ,Rahul Gandhi ,Israel ,NSO ,Supreme Court… ,Dinakaran ,
× RELATED தேங்காய் எண்ணெய் சமையல் பொருளா? அழகு...