×

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கருத்து

அகர் மால்வா: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை என காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஒன்றிய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதுதொடர்பான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியபிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய் சிங், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்தியபிரதேச மாநிலம் அகர் மால்வாவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த திக் விஜய் சிங்கிடம் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த திக் விஜய் சிங், “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை” என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் பாஜவினரை ராகுல் காந்தி தள்ளி விட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, “இது முற்றிலும் தவறானது. போராட்டம் செய்த பாஜ தலைவர்களிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. ஒரு பாஜ எம்பி மற்றொருவர் மீது விழுந்தார் என்று திக் விஜய் சிங் கூறினார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கருத்து appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Congress ,Digvijay Singh ,Malwa ,One ,
× RELATED நீதிபதி லோயா மரணம் குறித்து...