×

தேசிய அளவிலான தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை

செங்கோட்டை,டிச.21: எக்ஸ்ட்ரா மார்க்ஸ் நிறுவனம் நீட், ஐஐடி அடிப்படைத்தேர்வை தேசிய அளவில் நடத்தியது. இத்தேர்வில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வகுப்பு வாரியாக நடைபெற்ற இத்தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சஹானா சைனப், கிருத்திகா அம்மச்சர், நஸ்ரின் அதிஷா, ஹைபானா, மாணவர்கள் ஜெகோவின் டேனியல் மற்றும் முகைதீன் அப்துல் ஹாஜீத் பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர். மேலும் எக்ஸ்ட்ரா மார்க் நீட் மாதிரி தேர்வில் சுகன்யா முதலிடத்திலும், ஐஐடி மாதிரி தேர்வில் மரியம் முதலிடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் சேக்செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் வாழ்த்தினர்.

The post தேசிய அளவிலான தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Treasure Island International School ,Sengottai ,Treasure Island International School Sahana… ,Dinakaran ,
× RELATED ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை