×

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக குறையும் தங்கம் விலை: சவரன் ரூ.57,120க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரபடி தங்கத்தின் விலையானது தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் முதல் அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,840க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதாவது சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒருகிராமுக்கு ரூ.90 குறைத்து ரூ.7,140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1-க்கு குறைந்து ரூ.100க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.1,160 குறைந்துள்ளது.

The post சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக குறையும் தங்கம் விலை: சவரன் ரூ.57,120க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,SHAWARAN ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120 க்கு விற்பனை!!