×

100 நாள் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலாகா தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நிலைக்குழு நூறு நாள் வேலை பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு வருவதற்கு ஒன்றிய அரசை விமர்சித்து உள்ளது. இந்த நிலைக்குழு மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் தொடர்பான விஷயத்தில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

ஊதியத்தை உயர்த்துவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரே மாதிரியான பதில்களை அனுப்புகிறது. நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி, அதிகரித்து வரும் பணவீக்கம்,வாழ்க்கை செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நேரத்திலும் 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் ரூ.200 வழங்கப்படுகிறது. சில மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.200க்கும் அதிகமாக வழங்கப்படுகிறது. அந்த மாநிலங்களிலும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குகின்றனர். எனவே, 100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

* அரியானாவில் அதிகம்
அரியானா மாநிலத்தில்100 நாள் பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.374 வழங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அருணாச்சல பிரதேசம்,நாகலாந்து மாநிலங்களில் குறைந்த அளவாக ரூ.234 வழங்கப்படுகிறது.

The post 100 நாள் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Parliamentary Standing Committee ,Union Government ,New Delhi ,Standing Committee on Rural Development and Panchayat Raj ,Congress ,Saptagiri Shankar Ulaga ,Standing Committee ,Lok Sabha… ,Dinakaran ,
× RELATED பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்..!!