திருவையாறு, டிச.13: திருவையாறு அருகே கண்டியூர், சாத்தனூரில் கனமழையால் ஒரு குடிசை வீடு, ஒரு ஓட்டு வீடு சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் வானிலை மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து சில மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் முதல் மிதமான மழை பெய்து வருகிறது. திருவையாறிலும் மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சன்னாசி என்பவரின் குடிசை வீட்டின் ஒரு பக்கச்சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் சாத்தனூர் கிராமம், வெள்ளாளர் தெருவில் வசிக்கும் சுகந்தி என்பவரது ஒட்டு வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருவையாறு தாசில்தார் தர்மராஜ் சம்பவ இடத்தை சென்று நேரில் பார்வையிட்டார்.
The post கண்டியூர், சாத்தனூரில் மழையால் 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.