×

கந்தர்வகோட்டை பெரிய கடை தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

 

கந்தர்வகோட்டை,டிச.13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றானா பெரியகடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலைவழியே அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண் மேல்நிலை பள்ளி, நீதிமன்றம், வட்டார வள மையம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளது.

இதனால் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. ஆகையல் சம்பந்தபட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பெறும் வகையில் ஆக்கிரமிப்பு அகற்றி முறையாக போக்குவரத்திற்கு தகுந்தாற்போல் இந்த சாலையை கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post கந்தர்வகோட்டை பெரிய கடை தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Periya Kadai Street ,Kandarvakottai ,Pudukkottai district ,
× RELATED காட்டுநாவல் ஊராட்சியின் நவீன இயந்திரம் மூலம் புல் பூண்டு வெட்டும் பணி