×

கொல்லிமலை சித்தர் பீடத்தில் குருபூஜை விழா

சேந்தமங்கலம், டிச.13: கொல்லிமலையில் உள்ள ஓசானி சித்தர் பீடம் சார்பில், மாணிக்க சித்தர் கோயிலில் 15ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி முதல் கால, 2ம் கால பூஜைகள் நடந்தது. அறப்பளீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடம் எடுத்து, ஓசானி சித்தர் பீடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், மாணிக்க சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post கொல்லிமலை சித்தர் பீடத்தில் குருபூஜை விழா appeared first on Dinakaran.

Tags : Guru Puja festival ,Kollimalai Siddhar ,Peetham ,Senthamangalam ,Manicka Siddhar Temple ,Osani Siddhar Peetham ,Kollimalai ,Arappaleeswarar temple ,Siddhar Peetham ,
× RELATED மருதுபாண்டியர் குருபூஜை விழா